நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 95 வயதாகிறது. அரசியல் வாழ்க்கையில் அனைவராலும் விரும்பக்கூடிய தலைவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர். தமிழகத்தில் கடந்த 75வது சுதந்திர தின விழாவின்போது நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர்

வழங்கி கவுரவித்தார்.

மேலும், அவருக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. உடனே முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலை உடன் தனது பங்கிற்கு 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கிவிட்டார்.

இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து குணமாக தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வேண்டியுள்ளனர்.

பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் முன்னாள் எம்.பி.யான இல.கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல.கணேசன் இன்று திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.