ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது…
எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார், ஒருபுறம் சனாதனம், மனுநீதி பேசுபவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மறுபுறம் திராவிடம் என பேசுகிறார். திராவிட மாடலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
ஆனால் அவர் சனாதனவாதிகளின் கைக்கூலியாக உள்ளார், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தமிழகத்தில் அனுமதிக்க என்ன அவசியம் உள்ளன. கோரிக்கை மற்றும் அமைதியை வலியுறுத்திச் சென்றால் கூட அனுமதிக்கலாம். மதத்ததால் பிரிவுப்படுத்தும் இவர்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
