மெக்ஸிகோவில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த காரில் தனது நண்பருடன் சாகசம் நிகழ்த்திய 16 வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெராக்ரூஸ் அருகில் உள்ள போசா ரிகா நகரில் கடந்த இறுதினங்களுக்கு முன்பு சறுவலான சாலையில் இரண்டு பேர் தங்கள் ரேசர் காரில் பலமுறை சாகசம் நிகழ்த்தியுள்ளனர்.
பிறந்தநாள் பரிசாக கிடைத்த காரில் இருவரும் இதுபோன்று சாகசம் நிகழ்த்தி வருவதை அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் இதனை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்போது ஒருமுறை வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து பலமுறை பல்டி அடித்து தூக்கி வீசப்பட்டது.
A una joven de 16 años le regalaron un vehículo tipo razer por su cumpleaños y lo conducía a toda velocidad en Poza Rica,Veracruz, por lo que volcó y perdió la vida. #Video 🎥👇🏽 pic.twitter.com/U11sK9aV37
— JORGE BECERRIL JB/8 (@MrElDiablo8) September 29, 2022
இந்த சம்பவத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 16 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காரை ஓட்டி வந்த அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த கார் சாகசத்தை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன், பிறந்தநாளன்று உயிரிழந்த சிறுமிக்காக வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.