டெல்லி: ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பதவி, தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மாநிலங்களவை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று அண்மையில் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.