
ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வட்டி விகிதத்தை 4வத முறையாக ரிசர்வ வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ விகிதம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவனைத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலகப் பொருளதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.