இணைய சேவை என்பது தற்போது இந்தியாவில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அனைவரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணைய வசதிகளை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இந்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் 5G இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்ஹவினி வைஷ்ணவ், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல், வோடோபோன் குழுமத்தின் இந்தியா தலைவர் குமார் மங்களம் பிர்லா போன்றோர் உடன் இருந்தனர்.
5G சேவையை அக்டோபர் 1 துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!
முதலில் 5G தொழில்நுட்பத்தை பற்றி பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள பிரதமர் அங்கு அமைக்கபட்டிருந்த கண்காட்சிக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் 5G சேவையை துவக்கிவைத்தார். இதுகுறித்து பேசிய அவர் இது 130 கோடி மக்களுக்கான பரிசு என்று தெரிவித்தார். இந்த சேவையின் மூலம் அதிகபடியான இணைய வேகம், சிறந்த தகவல் இணைப்பு போன்றவை கிடைக்கும்.
இதனால் ஆன்லைன் மூலம் கல்வி, வணிகம், தகவல் தொடர்பு போன்றவை மேம்படும் என்று அவர் கூறியுள்ளார். இது பல புதிய முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையா இருக்கும் எனவும் இதனால் தொழில்வளர்ச்சி பெரிய அளவு முன்னேற்றம் அடையும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Twitter செயலியில் புதிய ஆப்ஷன்! ட்வீட் Edit வசதி!
முதலில் இந்த 5G இணைய சேவை இந்தியாவில் உள்ள 13 முக்கிய நகரங்களுக்கு வாங்கப்படும் என்றும் இது வரும் தீபாவளி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1.5G சேவையை பற்றி இந்தியாவின் முன்னை தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel, Vi ஆகிய நிறுவனங்கள் பிரதமருக்கு விளக்கம் அளித்தன.
2.Jio ஸ்டாலில் நின்ற பிரதமருக்கு 5G தேவையை பற்றி விளக்க புதிய ஜியோ நிறுவனத்தின் கூலிங் க்ளாஸ் வழங்கப்பட்டது.
Whatsapp செயலியில் இனி Video Calling செய்ய புதிய வசதி!
3.பின்னர் பேசிய பிரதமர் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு எலக்ட்ரானிக் பொருட்களின் விலை, டிஜிட்டல் இணைப்பு, டேட்டா வசதிகள் விலை மற்றும் அனைத்திலும் டிஜிட்டல் வசதி போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
4.உலகில் ஏற்படும் தொழில்புரட்சி 4.0 மூலம் இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
5. முன்னதாக ஒரு GB விலை 300 ரூபாயாக இருந்தது. தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டம் காரணமாக அது 10 ரூபாயாக குறைந்துள்ளது.
6.2014 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்தியாவில் இனைய சேவை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 6 கோடி தற்போது அது 80 கோடியாக உயர்ந்துள்ளது.
7.டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட UPI முறை தற்போது ஒவ்வொரு கடைசி குடிமகனும் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
8.5G சேவையின் கட்டணம் 4G சேவையின் கட்டணத்திற்கு இணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்