தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்க இருக்கும் நிலையில், இந்தியில் பிக்பாஸ் 16வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுவும் கடந்த 12 சீச்சன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கான மிகப்பெரிய மார்க்கெட் காரணமாக சல்மான் கானையே பிக்பாஸ் டீம் தொடர்ச்சியாக தொகுப்பாளராக களமிறக்கி வருகிறது. இப்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் சீசனிலும் தொகுப்பாளராக களமிறங்கும் அவருக்கு, பேசப்பட்டிருக்கும் சம்பளம் தொடர்பாக பரவிய தகவல் சினிமா துறையை ஷாக் அடிக்க வைத்தது.
அதாவது கடந்த சீசன்களில் 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர் இந்த முறை ஆயிரம் கோடி ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவியது. அந்த சம்பளத்தை பிக்பாஸ் டீம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது தான் ஹைலைட். இது குறித்து சல்மான் கானிடமே கேட்கப்பட்டது. இந்த செய்தியை பார்த்து தானும் ஷாக்கானதாக தெரிவித்துள்ளார். “ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினால், இனிமேல் வேலையே செய்யத் தேவையில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு தொகையை நான் நினைத்துகூட பார்த்ததில்லை. இதுபோன்ற வதந்திகளால் எனக்கு வழக்கறிஞர் செலவு தான் அதிகமாகிறது. வருமான வரித்துறையினரும் என்ன உற்று கண்காணிக்கிறார்கள்
இப்படியான செய்திகளால் பிக்பாஸ் ஷோவுக்கு நான் வரவில்லை என்று கூட சொல்வேன். எனக்கு அடிக்கடி கோபம் வந்துவிடும். இருந்தாலும், இவர்களுக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை என்பதை அறிந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன். இந்த ஷோ எனக்கு மிகவும் நெருக்கமானது. புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இதன் மூலம் கிடைக்கிறது. 4 மாதத்தில் ஒரு புதிய குடும்பம் கிடைத்துவிடுகிறது” என சல்மான்கான் தெரிவித்துள்ளார்.