அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

புதுடெல்லி: அண்ணல் காந்தியடிகள் என்று அழைக்கப்படும் மாண்புமிகு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், அவரது இந்த எளிய பண்பே அவரை மகானாக உயர்த்தியது. அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் இலட்சியத்தை போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, “அனைத்துலக வன்முறையற்ற நாள்” என்று அறிவித்துள்ளது.

வன்முறையை ஒழிக்கக் கோரும் இந்த நாளை சர்வதேச நாடுகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன. இன்று நாடு முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெறும். 

பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் முயற்சியைக் கொண்டாடும் வகையில் காந்தி விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் தேசத்தந்தை என்று புகழ்பெற்ற இந்தியத் தாயின் மூத்த மகனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 154வது பிறந்தநாளான இன்று காலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் அண்ணல் காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள்.

ராஜ் காட்டில் தலைவர்கள் உட்பட பொதுமக்களும் அண்ணல் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று தான். மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகத்தை கொடுப்பது ஆகும்.

ஏழை மக்களின் வாழ்வாதாரமான நெசவுக்கு உதவு இயந்திரமான ராட்டை அண்ணலுக்கு மிகவும் பிடித்தது. எனவே, தேசத்தந்தையின் பிறந்ததினம் ராட்டை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. 

தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.