ஆபாச படம் ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

ஷிவமொகா : ஆபாச வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஷிவமொகா கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.ஷிவமொகா, சொரபாவை சேர்ந்தவர் திம்மப்பா, 42. இவர் சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்தார். இது குறித்து, ஷிவமொகா சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது.விசாரணை நடத்திய போலீசார்,

2020 ஜனவரி 12ல், திம்மப்பாவை கைது செய்து, ஷிவமொகா கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை, தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் நிரூபணமானதால், இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1.44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி லதா, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.