ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கிழக்கு ஜாவாவில் நேற்று (சனிக்கிழமை) நடந்த போட்டியில் அரெமா அணியும், பெர்சிபையா சுராபாயா ஆகிய அணிகள் மோதின.
இதில் 3-2 என்ற கோல் கணக்கில் பெர்சிபையா அணி வெற்றி பெற்றது. சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அரெமா அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கோபம் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.இதனால் மைதானத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 127 பலியானதாகவும் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலவரம் குறித்து போலீஸார் தரப்பில், “ இந்தச் சம்பவத்தில் இதுவரை 127 பேர் பலியாகி உள்ளனர். இதில் 2 போலீஸாரும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் 127 பேர் பலியானது இந்தோனேசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
NEW – Over 100 people were killed tonight in riots that broke out at a football match in Indonesia.pic.twitter.com/hGZEwQyHmL
— Disclose.tv (@disclosetv) October 1, 2022