இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரம்; 129 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் முடிவில் மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில், 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிது.

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா(East Java) மாகாணத்தில், உள்ளூர் கால்பந்து அணிகளான அரேமா எஃப்சி(Arema FC) மற்றும் பெர்செபயா சுரபயா(Persebaya Surabaya) இடையே நேற்றிரவு போட்டி நடைபெற்றது.

கால்பந்து

இந்தப் போட்டியின் முடிவில் அரேமா எஃப்சி, பெர்செபயா சுரபயா அணியிடம் தோல்வியடைந்ததும் அந்த அணியின் ரசிகர்கள் பெருந்திரளாக மைதானத்துக்குள் நுழைந்தனர். இதில் பதற்றமடைந்த அனைவரும் அங்கிருந்து தப்பியோட ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மைதானத்துக்குள் கலவரம் ஏற்பட்டது. பின்னர் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸார் மைதானத்துக்குள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தனர். மேலும் கலவரத்தில் போலீஸார் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தோனேசியா கால்பந்து மைதான கலவரம்

இதில், கூட்ட நெரிசலில் 2 போலீஸார் உட்பட 36 பேர் மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதோடு 180 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக வெடித்த இந்தக் கலவரத்தில் மொத்தம் 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சோக சம்பவம் குறித்து ஊடகத்திடம் பேசிய இந்தோனேசிய விளையாட்டுதுறை அமைச்சர் ஜைனுடின் அமலி (Zainudin Amali), “இது நம்முடைய கால்பந்து விளையாட்டைக் காயப்படுத்தும் ஒரு வருந்தத்தக்க சம்பவம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.