நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இம்மாநிலத்தை மூன்று முறை ஆட்சி செய்தவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்தது இல்லை. இவர் சமாஜ்வாதி கட்சி தலைவராகவும் விளங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முலாயம் சிங்கிற்கு தற்போது 82 வயதாகிறது. இவரை உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தந்தையின் உடல்நிலை குறித்து அறிந்ததும் மகனும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான
அகிலேஷ் யாதவ்
அவர்கள் குருகிராம் விரைந்துள்ளார்.