பெங்களூரு : கர்நாடகாவில் நேற்று முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கர்நாடகாவில் உள்ள பெஸ்காம், ஹெஸ்காம், ஜெஸ்காம், மெஸ்காம், செஸ்காம் ஆகிய ஐந்து மின் வினியோக நிறுவனங்கள் நிலக்கரி விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, இந்நிறுவனங்கள் கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணைத்துக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆணையத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து நேற்று முதல் கர்நாடகாவில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி யூனிட்டுக்கு பெஸ்காம் 43 பைசா; செஸ்காம் 35 பைசா; ஹெஸ்காம் 35 பைசா; ஜெஸ்காம் 35 பைசா; மெஸ்காம் 24 பைசா உயர்த்தி உள்ளது.இந்த ஆண்டு கர்நாடகா முழுதும் ஏப்ரலில் யூனிட்டுக்கு 33 பைசாவும்; ஜூனில் 31 பைசாவும் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெஸ்காம் எல்லைக்குள் உத்தரவு அமலாகிறது.இதற்கு முன் மாதம் தோறும் 500 ரூபாய் மின்கட்டணம் வந்திருந்தால், இனி 540 ரூபாயாக அதிகரிக்கப்படும்.ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement