நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நாமக்கலில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை வகித்தார். வரும் 2024 மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? அதிமுக வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பன குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய தங்கமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை
வேண்டா வெறுப்பாக தான் ஏற்றுக் கொண்டார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் முரண்டு பிடித்தார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் பிரச்சனை செய்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் அவருடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவருக்கு எந்த வகையிலும் மரியாதை குறைவு ஏற்படக் கூடாது என இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
அவரது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர். ஓபிஎஸ்ஸிடம் தனியாக எங்களால் பேச முடியவில்லை. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் எப்போதும் உடனிருப்பர். இவர்கள் அனைவரும் அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் தாக்க முற்பட்டார். அதிமுக பிளவுபட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதனை அவர் நிறைவேற்றி விட்டார். அதனால் தான் பேச்சுவார்த்தை வேண்டாம் என வந்து விட்டோம். திமுகவை எதிர்க்க வேண்டிய அவர்கள், தொடர்ந்து திமுகவை புகழ்ந்து வந்தனர்.
தென் மாவட்டங்களுக்கு வந்து பாருங்கள் என ஓபிஎஸ் தரப்பினர் சவால் விட்டனர். சிங்கம் போன்று
சென்று வந்தார். எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் விரைவில் இல்லாமல் போய்விடும் நிலையை ஆளும் அரசு உருவாக்கி வருகிறது.
கே.ஆர்.என் ராஜேஷ்குமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையில் தற்போது 10 லட்சம் பேருக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டு, 25 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று தங்கமணி தெரிவித்தார்.