ஓரிரு மாதங்களில் அரசியல் வியூகம்… சரத்குமார் பரபரப்பு பேட்டி..!

தமிழகம் முழுவதும் வரலாற்று எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: வரலாற்று எழுத்தாளர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். இத்திரைப்படத்தை காண்பவர்கள் கல்கியின் நாவலை காவியமாக கருதுவர். நாவலை படிக்காதவர்களுக்கு திரைப்படத்தால் கதையின் ஓட்டத்தன்மையும், அடிப்படையும் புரிய வரும். நாவலை படிக்காதவர்களுக்கு ஆவலை தூண்டும்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சிறப்பாக இயக்கி உள்ளார். பாகுபலி சிறந்ததா பொன்னியின் செல்வன் சிறந்ததா என்கிற போட்டியே வேண்டாம் ரசிகர்கள் ஒற்றுமையுடன் படைப்பாளிகளின் படைப்புகளை பார்க்கவேண்டும். மேலும் கதையை படித்தவர்கள் படிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவரும் பார்க்கவேண்டும். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து உள்ளார்கள் என அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்போது உள்ள இளைஞர்கள் அதிக புத்தி சாலிகள் கதைகளை படிக்காமலேயே புரியும் தன்மை உள்ளவர்கள் இந்த பகுதி சிறிய கிராம பகுதியாக இருந்தாலும் இங்குள்ள மக்கள் ரசித்து பார்ப்பதே இந்த படத்தின் வெற்றி . மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட சிறப்பாக இருக்கும்.

சோழர்கள் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக திரைப்படம் அமைந்திருப்பது சிறப்பு. தஞ்சை மண்ணை கண்டு ரசிக்கும் ஆவலை இத்திரைப்படம் தூண்டும் என்பது முக்கியத்துவம். குணச்சித்திரம், கதாநாயகன், வில்லன் என்றில்லாமல் அதன் வேடம்தான் சிறப்பாகும். பல ஆண்டுகளாக திரைப்படத்தை திரையில் காண்பதற்கான எதிர்பார்ப்பு வலுவான வகையில் இருந்தது. தற்போது அதற்கான தருணம் நிறைவேறி இருக்கிறது.

வெளிநாட்டவர்களுக்கு தாஜ்மஹாலை காட்டுவதை விட, சோழ நாடு எப்படி இருந்தது என்பதற்கு திரைப்படம் உதாரணம். பொருளாதார பெருக்கம், நீர்வளப்பெருக்கம், வெளிநாடு வணிகம், போரிடுவது எவ்வாறு என்பதற்கு சோழர்கள் ஆட்சி காலமே சான்று. இத்திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த நான் மிஸ்டர் மெட்ராஸ் என்பது பெருமை. அரசியல் ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். மற்றவர்களைப் போல் அல்லாமல் ஓரிரு மாதங்களில் அரசியல் குறித்து வியூகம் செய்வேன். இந்தத் திட்டத்தை வகுத்தால் சிறப்பாக மக்களுக்கு செய்ய முடியும் என்ற ஓட்டத்தில் இருக்கிறேன். இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.