பெங்களூரு : பாம்பே உயர் நீதிமன்றத்தின், மூத்த நீதிபதி பிரசன்னா வரலே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரிது ராஜ் அவஸ்தி, ஜூலை 2ல் ஓய்வு பெற்றார். மூத்த நீதிபதி அலோக் ஆராதே, தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.செப்டம்பர் 28ல் நடந்த, உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், பாம்பே உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பிரசன்னா வரலேவை, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சட்டத்துறைக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.கொலீஜியம் சிபாரிசுக்கு, ஜனாதிபதி அனுமதியளித்து, பிரசன்னா வரலேவை நியமித்து, அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பார்.பெலகாவி நிப்பானியில், 1962ன் ஜூன் 23ல் பிறந்த இவர், 1985ல் வக்கீலாக தொழிலை துவங்கினார். மத்திய அரசு சார்ந்த வக்கீலாகவும் பணியாற்றினார். 2008ன், ஜூலை 18 முதல், பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement