கால்பந்து போட்டியின் போது வன்முறை – 127 பேர் பலி!!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தோனேசியன் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் பெர்சிபயா சுரபயா அணியும், அரேமா மலாங் அணியும் பரம எதிரிகள்.

இரண்டு அணிகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. இதில் பெர்சிபயா சுரபயா அணி 3-2 என்கிற கோல் கணக்கில் அரேமா மலாங் அணியை வீழ்த்தியது.

இதனால் ஆத்திரமடைந்த அரேமா மலாங் அணி ரசிகர்கள் பெர்சிபயா சுரபயா அணி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் கலவரமாக வெடித்தது.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதிலிருந்து தப்பித்து மைதானத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறியும், கூட்டத்தில் மிதிபட்டும் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். கலவரத்தால் இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள 180 பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.