முதல் அரையாண்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 350 கோடி ரூபாய் அதிகம்!
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் குறைக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு காரணம்காட்டி தமிழகத்தில் வரி உயர்வை அமல்படுத்தியது.
இன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி உடன் சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் முதல் பாதை அரையாண்டிற்கான சொத்து மற்றும் தொழில் வரி வசூல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 945 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விட 345 கோடி ரூபாய் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்தமே 1240 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வருட முதல் நிதி அரையாண்டிலேயே 945 கோடி ரூபாய் வசலாகி உள்ளதால் 2022-2023 நிதியாண்டில் மொத்தம் சென்னை மாநகராட்சிக்கு 1700 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடம் நிலம் உரிமையாளர்களிடமிருந்து சொத்து மற்றும் தொழில் வணிகம் சார்ந்த இயங்கும் கட்டிடங்களின் தொழில் வரியும் வசூலிக்கப்படுகிறது.