முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. நகமும், சதையுமாக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும்
ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நாளடைவில் அதிமுக தலைமை பதவியை குறி வைத்து, இருவரும் போட்டியில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தன்வசமாக்கினார்.
இதன் பலனாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்தது.
இதை பெரிதும் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்.
அத்துடன் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நிரந்தரமாக ஒதுக்கி வைக்கும் விதமாக அதிமுக உறுப்பினர்கள் அடையாள அட்டையில் மாற்றம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதை மோப்பம் பிடித்த ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி சத்தமே இல்லாமல் செய்து வரும் பணி அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, எடப்பாடி பழனிசாமி அனைத்து தோல்விகளுக்கும் அதிமுக அலுவலகத்தில் வாஸ்து சரியில்லாதது தான் என ஜோதிடர்கள் யாரோ காதில் ஓதியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தனது ராசிக்கு ஏற்ப அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா அறை உள்பட சில அறைகள் இடித்து மாற்றம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ராசிக்கு ஏற்ப வாஸ்துப்படி அமைத்து வைத்திருந்த அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி மறுசீரமைப்பு செய்து வருவதாக கூறப்படுவதால் அதிமுக தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர்.