டேபிளுக்கு வந்த ரிப்போர்ட்; முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

. இவரது பேரன், பேத்தி உள்பட குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் ஒரு காரில் பயணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு அருகில் மற்றொரு காரில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மற்றும் அவரது மனைவி பயணம் செய்து உள்ளனர்.

அப்போது இரு கார்களும் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், குடி போதையில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கே.எஸ்.அழகிரியின் பேத்தியும், கே.எஸ்.அழகிரியின் பேத்தி தான் குடித்துவிட்டு கலாட்டா செய்ததாக ஐஏஎஸ் அதிகாரி தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் குடும்பத்தினர், இந்து சமய அறநிலைய துறை கூடுதல் ஆணையர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் குடும்பத்தினர் ஆகியோர் மீது சென்னை அசோக் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கே.எஸ்.அழகிரியின் பேரன், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது டேபிளுக்கு வந்த சூடான ரிப்போர்ட்டை பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ரிப்போர்ட்டில், கே.எஸ்.அழகிரி குடும்பத்தினர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் இடையே நடைபெற்ற தகராறின்போது போலீஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆகியோரிடம் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதல் சம்பவத்தின்போது ஐஏஎஸ் அதிகாரியிடம், ‘நீ எவனா இருந்தால் எங்களுக்கு என்ன? உன்னை வீடு புகுந்து வெட்டுவோம்’ என அழகிரியின் ஆட்கள் ஏகத்துக்கும் மிரட்டியது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ரிப்போர்ட்டை பார்த்து, தமிழக முதல்வர்

அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் காங்கிரஸ் தலைவர் குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால், ‘மோதல் முற்றும் அளவுக்கு ஐஏஎஸ் ஏன் நடந்து கொள்ள வேண்டும்?’ என முதல்வர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளதால், அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.