தருமபுரி: தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சியடைகின்றனர்.
தமிழகத்தில் மிகசிறந்த சுற்றுலா தளங்களின் ஒன்றானது ஒகேனக்கல். இங்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல்லில் அதிக நீர்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து, ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
இதையடுத்து காலாண்டு விடுமுறை, ஆயுதபூஜை ஆகிய விடுமுறை தினங்கள் வருவதால் ஒகேனக்கல்லுக்கு ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.