பெங்களூரு : பல்லாரியில் ஒரு மாதம் தங்கவும், குழந்தை பெற்றுள்ள மகளை சந்திக்கவும், அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக, அக்டோபர் 10ல் உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியிட உள்ளது.சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைபட்டிருந்தார். 2015ல் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்தது.
கர்நாடகாவின் பல்லாரி, ஆந்திராவின் கடப்பா, அனந்தபூருக்கு செல்லக்கூடாது என, நிபந்தனை விதித்திருந்தது. சில கட்டாய சந்தர்ப்பங்களில், அவர் பல்லாரிக்கு செல்ல, உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.தற்போது, அவர் பெங்களூரில் உள்ளார். ௨௦௨௩ சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆலோசிக்கிறார்.இவரது மகளுக்கு, சமீபத்தில் பெங்களூரின் மருத்துவமனையில், குழந்தை பிறந்தது. தற்போது தாயும், குழந்தையும் பல்லாரியில் உள்ளனர்.பல்லாரியில் ஒரு மாதம் தங்கவும், மகளை பார்க்கவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனார்த்தன ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக, அக்டோபர் 10ல் உத்தரவு வெளியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement