இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பல நாட்கள் நீடித்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியது இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மழை தற்போது குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து, நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது.