புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் என்ற கடுமையான சூறாவளி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு, நமது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை(செப்.,28) இயன் என்ற என்ற சூறாவளி கரையை கடந்தது. அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் இதுவும் என கூறப்படுகிறது. இதனால், புளோரிடா கடுமையான பேரழிவை சந்தித்துள்ளது.
வீடுகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் லீ கவுண்டி என்ற இடத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், புயல் காரணமாக நேரடியாகவும் மற்றும் மறைமுக காரணங்களாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஐ தாண்டும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் புயலால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
புயலால் பேரழிவை சந்தித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் அப்பகுதி மக்களும் இணைந்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்
இயல் புயலால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: இயல் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பேரழிவுக்காக அமெரிக்க அதிபர் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், அமெரிக்க மக்களின் நினைவாக எங்களது நினைவுகள் உள்ளன எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement