பொன்னியின் செல்வன் Vs நானே வருவேன்… நாங்கள் விட்டுக்கொடுத்தோம் – இயக்குநர் செல்வராகவன் பெருமிதம்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். நீண்ட நாள்கள் இருவரும் இணையாமல் இருந்த சூழலில் தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் லேட்டஸ்ட் ஆள்வந்தானாக படம் உருவாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். அதுமட்டுமின்றி படத்தின் கதையிலும் எந்தவித புதுமையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

அதேசமயம் பொன்னியின் செல்வன் படம் 30ஆம் தேதி ரிலீஸானது. பொன்னியின் செல்வன் ரிலீஸின்போது எதற்காக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய பார்த்திபன்,நானே வருவேன்’ என நேற்று இரவு அடம்பிடித்து இன்று காலையில் வந்துவிட்டேன் எனவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடயே படம் ஒழுங்காக போகாததற்கு காரணம்,ப்ரோமோஷன்களுக்கு பெயர் போன தயாரிப்பாளர் தாணு நானே வருவேன் ப்ரொமோஷனில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு நடந்த ப்ரோமோஷனில் ஒரு துளிக்கூட நானே வருவேன் படத்துக்கு இல்லை. தாணு ஓவர் கான்ஃபிடென்ஸாக இருந்து சொதப்பிவிட்டார் எனவும் பலர் கூறினர்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நானே வருவேன் ப்ரோமோஷன் குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய செல்வராகவன், “பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒருபக்கம் சிறப்பான ப்ரோமோஷன் நடந்தது. ஒரு தமிழனாக அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அது நம் பெருமை.

மணிரத்னம் போன்ற மிகப்பெரிய இயக்குநர் படம் பண்ணியிருக்கும்போது நாமும் இருக்கிறோம் என காண்பித்துக்கொள்வதற்கு ப்ரோமோஷன் செய்யக்கூடாது. அவர்களுக்கு அது ஃப்ரீயாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார். செல்வராகவன் மணிரத்னத்தின் ரசிகர் என்று அனைவருக்குமே தெரியும். தற்போது அவரது இந்தப் பேட்டி அதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.