பாலக்காடு: நெல்லியாம்பதி, போத்துண்டி மலைப் பாதையில் குட்டியுடன் காட்டுயானை உலா வந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம் பதி – போத்துண்டி சாலை 14வது கொண்டை ஊசி வளைவில் குட்டி காட்டுயானை உலா வந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போத்துண்டிவனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்தும், சத்தம்போட்டும் யானைகளை விரட்டினர்.
சாலையில் நடமாடிய யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படம் பிடித்தனர். அவர்களுக்கு வனத்துறையினர் உரிய அறிவுரை வழங்கி எச்சரித்தனர். இந்த வழித்தடத்தில் அடிக்கடி காட்டு யானைகளின் அட்டகாசம் அதிமாக உள்ளது. இவற்றை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லியாம்பதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.