விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது வீரபாண்டி கிராமம். இந்த கிராமத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றைய கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டமானது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது எனவும், 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காததால் அமைச்சரிடம் முறையிட தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் தான் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கட்சிப் பாகுபாடு பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதாக அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது கிராம சபை கூட்டம் இதில் அரசியல் பேச வேண்டாம் என அமைச்சர் என கூறினார்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் கிராம மக்கள் அடுக்கடுக்காக 100 நாள் வேலை குடிநீர் பிரச்சினை என அதிகாரிகளிடம் முறையாக செயல்படவில்லை என கூறி வந்தனர்.
இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள ஆதிச்சனூர் பகுதிக்கும் அமைச்சர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதால் அங்கு செல்வதாக கூறி பாதியிலேயே அமைச்சர் பொன்முடி வீரபாண்டியிலிருந்து கிளம்பி சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், கேள்வி கேட்ட பெண் கவுன்சிலரை, ”ஏய் இரு.. உட்காரு” என்று அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியது கூடி இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.