விண்வெளி குப்பைகள் தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்கியது அமெரிக்கா

Space Pollution vs USA: விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்வெளி குப்பைகள், பிரபஞ்சத்தில் உள்ள சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை சமாளிப்பதற்கான புதிய விதிகளின் மீது அமெரிக்க எம்.பிக்கள் வாக்களித்தனர். “இது அதிக பொறுப்புணர்வைக் குறிக்கும் மற்றும் சுற்றுப்பாதை குப்பைகளை அதிகரிக்கும் மோதல்களை குறைப்பது மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தோல்விகளை குறைக்கும் முயற்சியில் வகுப்பட்ட விதிகள்” என்று யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் FCCyஇன் தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கூறினார்.

இந்த புதிய விதிகள் 4-0 என்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டன, மேலும் தற்போது செயலில் உள்ள பயணங்களில் விண்கலங்களின் வழியில் வரக்கூடிய செயலிழந்த செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து அகற்றுவதற்கான நேரத்தைக் குறைப்பதும் இதில் அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

“இது அதிக பொறுப்புணர்வைக் குறிக்கும் மற்றும் சுற்றுப்பாதை குப்பைகளை அதிகரிக்கும் மோதல்களின் குறைவான ஆபத்து மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தோல்விகளின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்” என்று FCC தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கூறினார். இதன்படி, அமெரிக்க ஆபரேட்டர்களுக்கு குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை 25 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றும்.

1957 முதல் 10,000 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இப்போது செயல்படவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“செயலிழந்த செயற்கை கோள்கள், நிராகரிக்கப்பட்ட ராக்கெட் கோர்கள் மற்றும் பிற குப்பைகள் விண்வெளியில் குவிந்து வருகின்றன. தற்போதைய மற்றும் எதிர்கால பயணங்களுக்கு சவால்களை உருவாக்குகின்றன” என்று FCC கூறியது.

2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 4,800 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன என்றும், அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியான குறைந்த-பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 

“இரண்டாவது விண்வெளி யுகம் இங்கே உள்ளது. அது தொடர்ந்து வளர, நம்மை நாமே சுத்தம் செய்து கொள்ள நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும், அதனால் விண்வெளி கண்டுபிடிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்று FCC தலைவர் கூறினார்.

FCC கமிஷனர் ஜெஃப்ரி ஸ்டார்க்ஸின் கூற்றுப்படி, நாசா விண்வெளி குப்பைகள் பற்றிய பல கல்வி ஆய்வுகளுக்கு நிதியளித்துள்ளது, அதே நேரத்தில் செனட்டர்களின் இரு கட்சி குழு, குப்பைகளை அகற்றுவதற்கு உதவும் தொழில்நுட்பத்தை தொடங்குக்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய விதி “குப்பைகள் பெருக்கத்தின் அதிகரிப்பைக் குறைக்கும்” என்று ஸ்டார்க் கூறினார். “பாதுகாப்பான இயக்கச் சூழல் இல்லாவிட்டால், குப்பைகள் அபாயமானவைகளாக மாறும். இதனால், விஞ்ஞான ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை சிந்திக்க வைக்கும் அபாயம் அதிகரிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஆயிரம் டன் தூசிகள் விண்வெளியில் இருந்து பூமியில் விழுகின்றன. விண்வெளியில் இருந்து குப்பைகள் விழுந்து கட்டிடங்கள் இடிந்து விழுவதும் பலமுறை நடந்துள்ளது.ஆனால் இதுவரை பூமியில் விண்வெளியில் இருந்து குப்பைகள் விழுந்து யாரும் இறந்ததாக எந்த செய்தியும் வரவில்லை. 

மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.