ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது. அரேமா மற்றும் பெர்செபயா என்ற இரு அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற வன்முறையில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர்.
விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் சேர்ந்து ஏற்பட்ட நெரிசலில் இந்த துரதிருஷ்டவசமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதைத் தவிர, 180 பேர் காயமடைந்தனர் என்று போலீசாரின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING: Over 100 people were killed and 200 injured in a riot at a football stadium in Malang Indonesia, authorities said. #news #BreakingNews #Newsnight #NewsUpdate #fifa #FIFA23 #Indonesia #malang#AremavsPersebaya#arema #Kanjuruhan #bonekjancok #FIFAMobileIndonesia pic.twitter.com/gMGGh5DDOl
— That Guy Shane (@ProfanityNewz) October 2, 2022
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டதால், ஓடவோ அல்லது ஒளிந்துகொள்ளவோ வேறு இடமில்லாமல் மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒரு கட்டத்தில் சுவாசிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட, மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அரேமா மற்றும் பெர்செபயா கால்பந்து போட்டிக்கு இடையே தோல்வியடைந்த தரப்பில் இருந்து ஆதரவாளர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்தனர் அதனால், அவர்களை வெளியேற்றுவதற்காக கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக, கிழக்கு ஜாவா மாகாணத்தின் இந்தோனேசியாவின் காவல்துறைத் தலைவர் .
மேலும் படிக்க | மீளாத்தூக்கத்தில் மண்ணை ஆளும் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வல புகைப்படங்கள்
மேலும் படிக்க | புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ