புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில்500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பல ஆண்டு களாக கோரிக்கை வைத்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக பொதுப்பணித் துறையின் மூலம் பைப்லைன் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீர் தரம் இல்லாமல் வந்துள்ளது. மேலும், மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொகுதி எம்எல்ஏவான ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் வீட்டையும் முற்றுகையிட்டனர். அப்போது, எம்எல்ஏ இல்லாததால் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து நேற்றும் பொது மக்கள் கலங்கலான குடிநீருடன் சென்று நெல்லித்தோப்பு சவரி படையாச்சி வீதியில் உள்ள ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். இத்தகவலறிந்து வந்த எம்எல்ஏ, உடனே பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அக்டோபர் 3-ம் தேதி பெரியார் நகர் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிவதாகவும், குடிநீர், சாலை உள்ளிட்ட பிரச்சி னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பைப்லைன் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீர் தரம் இல்லாமல் வந்துள்ளது.