7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடக்கின்றது.
இத்தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி – பங்களாதேஷ் அணியையும், இந்திய அணி – மலேசியா அணியையும் எதிர்கொள்கிறது.
போட்டித் தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
மலேசியா அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.