புதுச்சேரி : ஆயுத பூஜையையொட்டி கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும்
இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வாழ்வின் வளர்சிக்கு உதவிடும் தொழிற்கருவிகள், உபகரணங்களை போற்றுவதே இந்த பண்டிகையின் அடிப்படை அம்சம். உழைப்பே உயர்வு தரும் என்பதை உலகிற்கு உணர்த்தும். இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா, புதுச்சேரி மக்கள் அனைவரது இல்லங்களிலும் வெற்றியையும், கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றில் புதிய ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கட்டும் என கூறி உள்ளார்.இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement