இந்தியாவில் கொரோனா : 3,011 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 97 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 இலட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 36 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் 28 பேர் இறந்துள்ளனர். இதனால் 5 இலட்சத்து 28 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.