இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ரி20 போட்டி நாளை (04) நடைபெறவுள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இவ் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி குவஹாத்தியில் நேற்று (02) இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ஓட்டங்களும், தலைவர் ரோகித் சர்மா 43 ஓட்டங்களும் பெற்றனர்.
இதையடுத்து 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் நிறைவில் 221 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இதற்கமைய தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2 ஆவது ரி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் 2-0 என கணக்கில் வென்றுள்ளது.