மதுரை: ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருவதாக ஒன்றிய இணை அமைச்சர் பக்வந்த் குபா தெரிவித்தார். ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பக்வந்த் குபா, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மதுரையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஒன்றிய அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது. மதுரையில் 4.44 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2024ல் நிறைவடையும். இந்தியா முழுவதும் யூரியா உள்ளிட்ட உரத் தட்டுப்பாடு இல்லை’’ என்றார்.