கனேடிய பெண் ஒருவர் காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார்.
அவர் 2019ஆம் ஆண்டே இறந்துபோனதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Saskatchewanஇல் வாழும் Coreen Shatz, காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார்.
மறுமுனையில் அவருக்கு பதிலளித்தவர் கூறிய விடயத்தால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர்.
ஆம், அரசு ஆவணங்களின்படி, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதமே Coreen இறந்துபோனதாக பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிக்கல் என்னவென்றால், Coreen இறந்துபோனதாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளதால், அவர் காப்பீட்டு உதவி பெறவோ, மாணவர் லோன் பெறவோ, சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவோ கூட முடியாது.
மருத்துவத் துறையில் பணியாற்றும் Coreen, மேற்படிப்பை இப்போதுதான் துவங்கியுள்ளார்.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கார் லோன் ஒன்றிற்கு அவர் EMI செலுத்தவேண்டியுள்ளது, அவருக்கு வீட்டுக் கடன் ஒன்று வேறு இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இறந்துபோனதாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து அடுத்து எந்த அடியும் அவரால் எடுத்து வைக்க முடியாது. ஆகவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார் Coreen.
யாரோ ஒரு அலுவலர் செய்த தவறு Coreenக்கு இப்படி ஒரு சிக்கலை உருவாக்கியுள்ள நிலையில், இதுபோன்ற தவறுகள் நேர்ந்தால் அவை உடனடியாக சரி செய்யப்பட்டுவிடும் என்கிறது சம்பந்தப்பட்ட அலுவலகம்.
ஆனால், Coreen விடயத்தில் அப்படி நடக்கவில்லை.
தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக அலுவலகம் அலுவலகமாக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.