பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்தே, கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், கௌரவ டி.வீ. சானக, கௌரவ சாந்த பண்டார, கௌரவ அநுர திசாநாயக்க, கௌரவ ரஊப் ஹகீம், கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ். எம். எம். முஸ்ஸாரப், கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, கௌரவ எஸ்.எம். மரிக்கார், கௌரவ முஜிபுர் ரஹுமான், கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ , கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.