சென்னையை பொறுத்தவரை 95% மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு

வடசென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் 5 இல் இன்று மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுகூட்டமானது மாநகராட்சி அதிகரிகளோடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். இதன் பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தற்போது உள்ள தமிழக அரசை போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கூட போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் 1200 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் கட்டுமான பணி நடைபெறுகிறது எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

பின்னர் செல்லூர் ராஜு பற்றி பேசிய அமைச்சர், பொன்முடி குறித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என விமர்சித்த செல்லூர் ராஜி எந்த அடிப்படையில் அதை கூறினார் என கேள்வி எழுப்பினார். 

விமர்சத்திற்கு உண்டான விளக்கத்தை அந்த அமைச்சரே விளக்கம் கொடுத்த பிறகு அதை சர்ச்சையாக்குவது சரியாகாது. அதை தவிர்த்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாலசிறந்தது எனவும் அவர் பேசினார். பின் மனுஸ்மிருதி குறித்து ராஜா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை தவிர்க்கும் விதமாக தொடர்ந்து மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்தே அமைச்சர் பேசினார்..

பின் மாநகராட்சி தெரு பெயர் பலகையில் சுவொரொட்டி ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்ளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் செயல்கள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதன் பின்னர் சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலவரம் குறித்து பேசிய மேயர் பிரியா ராஜன் 95% சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மழைநீர் வடிகால் வாய்கால் திட்டபணிகளுக்கான வரைவு சென்னை ஐஐடி-யின் ஆய்வின் படி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.