ராணியார் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது.
Highgrove மாளிகையானது நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.
மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் வந்துள்ள நிலையில், தற்போது தந்தையிடம் இருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கிறார் அவர்.
ராணியார் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது.
அந்தவகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் வந்துள்ளது.
மொத்தம் 128,000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த தோட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு 21 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சார்லஸ் மன்னரானதும், இந்த தோட்டமானது அவரது மகன் வில்லியம் வசமானது.
இருப்பினும், அதில் அமைந்துள்ள Highgrove மாளிகையானது நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.
இதனால் ஆண்டுக்கு 700,000 பவுண்டுகள் தொகையை மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியத்திற்கு அளிக்க வேண்டும்.
@AP
1980ல் இருந்தே சார்லஸின் குடும்ப மாளிகையாக அமைந்துள்ளது இந்த Highgrove.
மேலும், தென் லண்டனில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானமும் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் வந்துள்ளது.
ராணியார் காலமான பின்னர், அதன் அடுத்த நாளே உரிய ஆவணங்களை தயார் செய்து, Highgrove மாளிகையை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.
குறித்த மாளிகையானது ராணியார் கமிலா தங்கியிருக்கும் மாளிகைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.