தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவை வேரூன்ற விடக்கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு கடலூரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் எஸ்.வாலண் டினா தலைமை தாங்கினார். மாநிலதுணைத் தலைவர் என்.அமிர்தம் கொடியேற்றினார். மாநில செய லாளர் பிரமிளா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
இதில், அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேசியது: கரோனா காலத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் உணவு தானியங்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட உணவு தானி யங்கள் எங்கே சென்றன? பெண்கள்மீதான வன்கொடுமை நாட்டின்பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. அதனை நியாயப்படுத் தும் போக்கும், மதம், சாதி, கவுரவத்தால் ஆதரிக்கும் போக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஆல் ஊக்கப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் வேரூன்ற விடக்கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும். இதற்கு எதிராக நாம் இயக்கங்கள் நடத்த வேண்டி உள்ளது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத அமைப்புகள், தங்களது மத கோட்பாடுகளை காட்டி பெண்களை அடிமையாகவே வைத்திருக்க விரும்புகின்றன. அதில் இருந்து பெண்கள் விடுபட்டு பெண்கள் இயக்கங்களில் ஈடுபட வேண்டும்.
ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராடிய பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்க ளுக்கு எதிரான பிற்போக்கு தனமான சட்டங்களை நீக்க வலியுறுத்தி அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
கியூபா நாட்டில் குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களுக்கும் சமபங்கு உள்ளது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு தண்டனை யும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நுண்கடன் நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் நடவடிக்கையை கட்டுப் படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனைபடைத்தவர்கள் கவுரவிக்கப் பட்டனர். இந்திய பெண்கள் கூட்ட மைப்பு மாநில பொதுச் செயலாளர் ஜி.மஞ்சுளா வாழ்த்தி பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி அரசியல் தீர்மானம் கொண்டு வந்தார். முன்னதாக, வரவேற்பு குழு தலைவர் ரேணுகாதேவி வரவேற்க, மாவட்டத் தலைவர் வி.மல்லிகா நன்றி கூறினார்.