தமிழ்நாட்டு பெண்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் விடுத்த வேண்டுகோள்… திமுக அரசு ஷாக்!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ”ஓசியில தான போறீங்க” என்று பெண் பயணிகளை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இன்றளவும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு இபிஎஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த சர்ச்சையின் உச்சமாக கோவை, மதுக்கரையைச் சேர்ந்த துளசி அம்மாள் என்ற மூதாட்டி. சில தினங்களுக்கு முன் அரசு மாநகரப் பேருந்தில் பயணித்தபோது, எனக்கு ஓசி வேண்டாம்… டிக்கெட் கொடு என்று நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்த வீடியோ அதிமுகவின் செட்டிங் எனவும், இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடி விங்கை சேர்ந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் துளசி அம்மாள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை விளக்கம் அளித்திருந்தது.

அதன் பிறகும் இந்த பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. ‘நாங்க ஓசியில பயணம் செய்றதாலதானே பல் ஸ்டாப்புல பேருந்து சரிய நிக்காம போகுது… நாங்க இனிமே டிக்கெட் வாங்கிட்டே பயணிக்கிறோம்’ என்று மீண்டும் ஒரு பெண்மணி ஆவேசமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இனி நாங்க ஓசியில பயணிக்குறதா இல்லை என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,

பொருளாளர் விஜயகாந்த் தன் பங்குக்கு இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘ பஸ்சில் பெண்கள் ஓசியில் தானே பயணிக்கிறார்கள் , என்கிறார் அமைச்சர் பொன்முடி. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு இப்போதுதான் சில்லரை மாற்றி கொண்டிருக்கிறோம் என்கிறார் மற்றொரு அமைச்சர்.

இப்படி தேர்தலில் ஜெயிப்பதற்கு முன் ஒரு நிலைப்பாடு, வெற்றிக்குப்பின் ஒரு நிலைப்பாடு. பஸ்சில் இலவச பயணம் வேண்டாமென்று மூதாட்டி கூறியதுபோவ, தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த பெண்களும் இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு அது பாடம்புகட்டுவதாக இருக்கும்’ என்று வலியுறுத்தி உள்ளார்

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.