வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவி ஈட்டியால் வதம் செய்யப்படுவது போல சிலை அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது.
அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கோல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப்பட்டிருந்தன.
இதில் மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் ஈட்டியில் வதம் செய்யப்படுவது போல அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன்பின், போலீசின் அறிவுறுத்தலின் படி, காந்தி பொம்மையை மாற்றி அசுரன் பொம்மை ஒன்றை அங்கே வைத்தனர்.
இது குறித்து, அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர் கூறுகையில், மகாத்மா காந்தியின் உருவத்தை போல அசுரன் பொம்மை வடிவமைக்கப்பட்ட சம்பவம் , வேறு காரணங்கள் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்த அவ்வாறு செய்யவில்லை என்றார்.
இது குறித்து, செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது தேசத் தந்தையை அவமதிக்கும் செயலாகும். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement