தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை

கவுகாத்தி,

இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் முதல் மற்றும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி வரும் செவ்வாய் கிழமை நடைபெறுகிறது.

இதில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்களே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் ரோகி சர்மா விளையாடியதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது 400 டி20 போட்டிகளில் (அனைத்து வித டி20 போட்டிகளையும் சேர்த்து) விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அண் வீரர் பொல்லார்ட் 614 போட்டிகளில் ஆடி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிராவோ 556 போட்டிகள், சோயப் மாலிக் 481 போட்டிகள், கிறிஸ் கெய்ல் 463 போட்டிகள், சுனில் நரைன் 435 போட்டிகள், ரவி போபரா 429 போட்டிகள், ரசல் 428 போட்டிகள், டேவிட் மில்லர் ஆகியோர் ரோகித்துக்கு முன்னர் உள்ளனர்.

இந்திய அளவில் ரோகித்துக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 368 போட்டிகளில் ஆடி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரூக்கு அடுத்தபடியாக எம்.எஸ். டோனி 361 போட்டிகளில் ஆடி 3வது இடத்திலும், விராட் கோலி 354 போட்டிகள், சுரேஷ் ரெய்னா 336 போட்டிகளில் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.