செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வருகை தந்து வனவிலங்குகளை பார்வையிட்டு மகிழ்ந்து செல்கின்றனர். சமீபத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரமாக பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடியிருந்த நிலையில், நாளை முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.