இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர்.
ஆனால் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மாணவிகள் இதனை வெளியில் கூறாமல் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அடுத்த திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்த பள்ளிகள் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ராஜா முத்தெழில் (வயது 49) என்பவர் கூடுதல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளின் கையைப் பிடித்து போர்டில் எழுத வைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் சீண்டகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மாணவிகள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் ஆசிரியைகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ராஜா முத்தெழில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர.