பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆயிரம் பாடசாலைகளில் இன்று (03) தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மந்த போசாக்கு நிலைமைக்கு தீர்வாக 2 ஆயிரம் சமூக வைத்திய சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி மேலும் தெரிவித்தார்.