உலக குடியிருப்பு தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு பிரதான வைபவம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர்ப்புற குடியேற்ற மேம்பாட்டு திணைக்களத்தினால் இது தொடர்பான நிகழ்வுகள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டன.
யாரையும் எங்கும் பாதுகாப்பதே இவ்வருடத்தின் தொனிப்பொருள் என நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கல்
மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றுள்ளது..