பிரபாஸ், கிரித்தி சனோன் காதலா ? ரசிகர்களின் பரபரப்பு பதிவுகள்
'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானவர் பிரபாஸ். அதற்குப் பிறகு நடித்த 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் அவரது பான் இந்தியா அந்தஸ்து இன்னும் குறையாமல் உள்ளது.
தற்போது, 'ஆதி புருஷ், சலார், பிராஜக்ட் கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்றைய விழாவில் பிரபாஸ், படத்தின் கதாநாயகி கிரித்தி சனோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் பிரபாஸ், கிரித்தி இருவரது வீடியோக்கள் சிலவற்றை ரசிகர்கள் பதிவிட்டு இருவரும் காதலில் உள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். பிரபாஸை காதலுடன் கிரித்தி பார்க்கிறார் என்றும், வெட்கத்தில் பிரபாஸ் தவிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இவர்கள் இருவரும் காதலிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் பரவின.
'பாகுபலி' படம் வெளிவந்த போது பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலர்கள் என்று செய்தி பரவியது. இப்போது 'ஆதி புருஷ்' படத்தின் புரமோஷன் ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரபாஸ், கிரித்தி சனோன் காதலர்கள் என்ற செய்தி பரவி வருகிறது. 42 வயதாகும் பிரபாஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.