டெல்லி: அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் எதிர்ப்பதாக ஒன்றிய
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. உள்ளூர் மொழிகளில் பாடம் எடுக்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. கொள்கை ரீதியாக இல்லாமல் அரசியலுக்காக புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் எதிர்க்கின்றனர். மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அதனடிப்படையில் தரம் உயர்த்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.