கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் அந்த ஊரிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி, ஆழக் குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் இறந்த குழிக்கு முன்பாக பாக்கு, வெற்றிலை, மஞ்சள், எலுமிச்சம் பழம் குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் மண்வெட்டி மற்றும் அறுத்த கோழி போன்றவையும் சிதரிக்கிடந்தன.
இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவரை கொன்றது அவரது நண்பர் மணி என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக லட்சுமணன் மற்றும் மணி இருவரும் சேர்ந்து புதையல் எடுக்க முடிவெடுத்தனர்.
சம்பவ தினத்தில் புதையல் எடுக்க குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் நரபலி செய்ய நினைத்த பெண்மணி அங்கே வரவில்லை. இதனால், லட்சுமணன் ஆத்திரமடைந்து மணியை கொல்ல முயற்சித்துள்ளார்.
அவரது கழுத்தை கடிக்க துவங்கியவுடன் சுதாரித்துக் கொண்ட மணி தன்னை காத்துக் கொள்ள லட்சுமணனை கொலை செய்துள்ளார். அதன் பின் புதையல் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தும் போயுள்ளார்.
ஆனால், எந்த புதையலும் கிடைக்கவில்லை என்று போலீசார் வாக்குமூலத்தில் அவரே தெரிவித்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வழக்கமாக அந்த பகுதிக்கு வரும் பெண் அந்த நாளில் வரமால் போனதால் இவர்களால் நரபலி கொடுக்க முடியாமல் போயுள்ளது. ஏதோ அந்த பெண்ணின் அதிர்ஷம் போல.
ஆனால், பேராசைப்பட்டு நண்பர் என்றும் பாராமல் கொள்ள துணிந்து லட்சுமணன் தன் உயிரை விட்டுள்ளார். கேடு நினைத்தவன் கெடுவான் என்பதற்கு இதுவே சாட்சி.